யூடியூப்-ல் பிரபலமான டிடிஎஃப் வாசன் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்த விபத்தில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.
தனது இரு சக்கர வாகனத்தை தன்னிடம் காவல்துறையினர் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என டிடிஎஃப் வாசன் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு வருகின்ற 29ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில் காவல்துறை சார்பில் டிடிஎஃப் வாசன் Youtube சேனலை முடக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்திற்கு காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது அவரது யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறையினர் அவரது YouTube சேனலை முடக்க நடவடிக்கை எடுத்திருப்பது பொதுமக்கள் இடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.