ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் பி.விஜயகுமாரி மனு அளித்துள்ளார்.
பணப்பட்டுவாடா மற்றும் விதிமீறல் பரப்புரை குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.