நடிகை யாஷிகா கடந்த 2021-ம் ஆண்டு இசிஆர் அருகே நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தார்.
இதையடுத்து நடிகை யாஷிகா ஆனந்த் மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மகாபலிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு யாஷிகா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் விசாரணைக்கு அவர் ஆஜராகததால் செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரெண்ட் உத்தரவிட்டுள்ளது.