தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரலாம்? அதிர்ச்சி கொடுத்த புதிய கொரோனா வைரஸ்! ஜாக்கிரதையா இருங்க!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால், அந்தந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள், புதிய கொரோனா திரிபான BF.7-ஐ மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்து வருகின்றனர். இந்தியாவிலும் பரவியுள்ள இந்த திரிபிற்கு, குஜராத் மாநிலத்தை சேர்ந்த 2 பேரும், ஒடிஷாவை சேர்ந்த ஒருவரும், இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், குஜராத்தில் பாதிக்கப்பட்ட 2 பேரும், தற்போது குணமடைந்துள்ளதாகவும், இந்தியாவில் புதிய திரிபின் பரவல் அதிகரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், செல் ஹோஸ்ட் அன்ட் மைக்ரோப் என்ற அறிவியல் இதழ், கட்டூரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், புதிதாக பரவி வரும் வைரஸ், தன்னுடைய அசல் திரிபைக் காட்டிலும், 4 மடங்கு அதிகமாக எதிர்ப்புத் திறன் கொண்டு என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களையும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும், இந்த புதிய திரிபு பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதன் திறன் மிகவும் வலுவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக, சீனாவில் உள்ள மக்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். ஆனால், இந்த வைரஸ் குறித்து மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், விரைவில் அதனை அழிக்கும் வழியை கண்டுபிடிப்பார்கள் என்பது உறுதி..