உலகத்தை மீண்டும் நடுங்க வைக்கும் சீனா! இன்னொரு அலையா? இப்பவே கண்ண கட்டுதே!

சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலகமே முடங்கி இருந்ததால், பொருளாதாரம் பலத்த சரிவை சந்தித்தது.

இதுமட்டுமின்றி, மனித உயிரிழப்பு பெருமளவில் ஏற்பட்டது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து, உலகம் படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், சீனாவின் அறிவிப்பு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர், மரணம் அடைந்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, சீனாவின் பல்வேறு பகுதிகளில், வைரஸ் தொற்றின் தாக்கம், அதிகரித்து வருவதாகவும், தகவல் கசிந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு, சீனாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்திருப்பது, உலக நாடுகளிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.