சுடுகாட்டில் நீண்ட வரிசை..கொரோனாவால் சிக்கித் தவிக்கும் சீனா..!

சீனாவில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனாவே முதன்முதலாக உலகத்திற்கு பரப்பி விட்ட சீனா தற்போது புதிய வகை கொரோனாவால் சிக்கித் தவித்து வருகிறது.

சீனாவில் மட்டும் அடுத்த மூன்று மாதங்களில் 60% வரை கொரோனா தொற்றுக்கு ஆளாவார்கள் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.

தடுப்பூசி போட்டு இருந்தாலும் இந்த வகை மாறுபாடு கொரோனா பாதிக்கிறது என்பதே அதிவேக பரவலுக்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. சீனா மட்டும் இன்றி பிரேசில், ஜப்பான், கொரிய நாட்டிற்கும் இந்த ஒமைக்ரானின் புதிய மாறுபாடு வகை கொரோனா பரவியிருப்பதாக தெரிகிறது.

சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக சொன்னாலும் ஐசியூ படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதேபோல், உயிரிழந்த உறவினர்களின் உடலை தகனம் செய்வதற்காக தகனமையங்களில் பலர் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கையும் சீனாவில் அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது.