பாஜக எம்பியை எட்டி உதைத்த பசு மாடு – கோமாதா பூஜையில் பரபரப்பு

பாஜக எம்பி ஜிவிஎல் நரசிம்மா ராவ் ஆந்திர பிரதேசத்தில் உள்ள குண்டூர் சில்லி மார்க்கெட்டில் திறப்பு விழா ஒன்றிற்காக சென்றுள்ளார். அப்போது திறப்பு விழாவிற்கு முன் கோமாதா பூஜை நடத்த வேண்டும் என்று அவர் கூறியதால் மார்க்கெட்டில் இருந்த பசு ஒன்றை தொழுவத்தில் கட்டி பூஜை செய்துள்ளனர்.

அப்போது எம்பி நரசிம்ம ராவ் அந்த பசுவை வணங்க சென்றபோது அந்த பசு அவரை உதைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.