ஸ்லோவாக்கியா நாட்டின் ஹேண்ட்லோவா என்ற பகுதியில் நேற்று அரசு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டின் பிரதமர் ராபர் ஃபிகோ கலந்துக் கொண்டார்.
அப்போது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து உலக நாட்டு தலைவர்கள் பலரும், தங்களது இரங்கல்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஸ்லோவோக்கியா நாட்டின் பிரதமர் மீது துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்ட செய்தி அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த கொடூரமான நடவடிக்கைக்கு என் கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் பிரதமர் ஃபிகோ விரைவில் குணமாக ஆசைப்படுகிறேன். ஸ்லோவாக்கியா நாட்டு மக்களுடன் இந்தியா எப்போதும் ஆதரவாக நிற்கும்” என்று கூறியுள்ளார்.