விபத்துக்குள்ளான அமெரிக்க ஆளில்லா விமானம் !

தென்மேற்கு போலந்து பகுதியில் வனப்பகுதிகள் அதிகமாகவுள்ளன.இந்நிலையில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் (டிரோன்) விபத்துக்குள்ளானது. விமான விபத்து குறித்து போலாந்து பாதுகாப்புதுறை அமைச்சகம் இன்று உறுதி செய்துள்ளது. இந்த விபத்து நேற்று மதியத்திற்கு மேல் நடந்துள்ளது. என்றும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

போலந்து ஊடக தகவலின் படி, ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதை வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஒருவர் தகவல் தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. தீயணைப்புதுறை அதிகாரி கூறுகையில், விபத்துக்குள்ளான டிரோன் விமானம் விழுந்தபோது வெடித்து சிதறவில்லை என்றும் உடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியதை தொடர்ந்து போலந்தின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்க படைகள் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News