போதைப்பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்

போதைப்பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா வீடியோ ஒன்றை சமூகவளை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி அரசு இந்தியாவில் இருந்து போதைப்பொருட்களை வேரறுக்க வேண்டும். போதைப் பொருள்கள் கடத்தலை அனுமதிக்கக் கூடாது என உறுதியாக உள்ளது.

இந்தியாவில் எந்தவிதமான போதைப்பொருள் வர்த்தகத்தையும் அனுமதிக்க மாட்டோம். போதைப் பொருளின் அச்சுறுத்தலை அகற்றி, போதையில்லா இந்தியா என்ற இலக்கை அடைய வேண்டும். போதைப் பொருட்களை ஒழிக்கும் வரை இந்த போராட்டம் ஓயாது.

போதைப் பொருட்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ரூ.22 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த நடவடிக்கை போதைப்பொருள் இல்லாத இந்தியாவுக்கான பாஜ., அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

மாநில அரசுகளின் உதவியுடன், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறேன். ஆனால் போதைப்பொருளுக்கு எதிராக மக்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது.

போதைப் பொருள்கள் இளைய தலைமுறையினருக்கு பாதிப்பை உருவாக்குகிறது. போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க முடியும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

RELATED ARTICLES

Recent News