காட்டுப்பகுதியில் சடலமாக கிடந்த கிரிக்கெட் வீராங்கனை!

புதுச்சேரியில் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியில் கலந்துக் கொள்வதற்காக, ஒடிசா கிரிக்கெட் சங்கம் சார்பில், பயிற்சி முகாம் அமைக்கப்பட்டது. இந்த முகாமில் 25 வீரங்கனைகள் கலந்துக் கொண்ட நிலையில், சிறப்பாக விளையாடிய பெண்கள் மட்டும், புதுச்சேரியில் நடக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், இந்த பட்டியலில், ராஜஸ்ரீ என்ற பெண்ணின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் மிகவும் வருத்தம் அடைந்த அப்பெண், ஒடிசா மாநிலம் பூரி பகுதியில் வசித்து வரும் தனது தந்தையை பார்க்க சென்றுள்ளார். ஆனால், அவர் தனது தந்தையை பார்க்க செல்லவில்லை என்பதை அறிந்த அந்த பெண்ணின் கிரிக்கெட் பயிற்சியாளர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ராஜஸ்ரீ-யை தேடி வந்தனர். இறுதியில், ஒடிசா மாநிலம் அதாகர் பகுதியில் உள்ள குருதிஜாதியா வனப்பகுதியில், ராஜஸ்ரீ சடலமாக கிடப்பதை, போலீசார் கண்டறிந்தனர்.

இதையடுத்து, உடலை மீட்ட அவர்கள், அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோனை முடிவுகள் வந்த பிறகே, மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்தனர். ஆனால், அந்த பெண்ணின் பெற்றோர், இதனை கொலை என்றும் ராஜஸ்ரீயின் உடலில் காயங்கள் இருந்தன என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News