Connect with us

Raj News Tamil

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை நேற்று வீழ்த்தியது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலிய அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 28 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனையடுத்து 200 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

200 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன் (0) ஆட்டமிழந்தார். ஜோஷ் ஹேசில்வுட் வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா (0), ஸ்ரேயஸ் ஐயர் (0) ஆகியோர் ஆட்டமிழக்க மைதானமே அதிர்ச்சியில் உறைந்தது. பின்னர் இணைந்த விராட் கோலி – கேஎல் ராகுல் இணை ஆஸ்திரேலிய பவுலர்களை துவம்சம் செய்தனர்.

இதன் காரணமாக இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 97 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையின் முதல் போட்டியிலேயே இந்தியா வென்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in விளையாட்டு

To Top