Connect with us

Raj News Tamil

பாடல்களுக்காக கோடி செலவு! சங்கரின் அதிரடி செயல் !

சினிமா

பாடல்களுக்காக கோடி செலவு! சங்கரின் அதிரடி செயல் !

ராம் சரண் படத்தின் பாடல்களுக்காக இயக்குநர் ஷங்கர் செலவிட்ட தொகை குறித்தான விவரம் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ மற்றும் நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். பிரம்மாண்டங்களுக்குப் பெயர் போன ஷங்கர் ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக செலவிட்டத் தொகை குறித்தான விவரம் வெளியாகியுள்ளது.

பார்வையாளர்களுக்குத் தரமான விஷூவல்- ஆடியோ இருக்க வேண்டும் என்பதற்காக படத்தில் இடம் பெறும் ஐந்து பாடல்களுக்கும் கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வரையில் ஷங்கர் செலவிட்டுள்ளார்.படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.பிரபுதேவா மற்றும் ஜானி மாஸ்டர் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளனர்.

பிரம்மாண்ட செலவுகள் மக்களிடம் இப்படம் குறித்த மாபெரும் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ராம் சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top