Connect with us

Raj News Tamil

2500 கோடி ரூபாய் கிரிப்டோ மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது:

உலகம்

2500 கோடி ரூபாய் கிரிப்டோ மோசடியில் ஈடுபட்ட கும்பல் கைது:

பான்சி ஸ்கீம் (Crypto Ponzi Scheme Scam) மூலம் 11 பேர் அடங்கிய கும்பல் அமெரிக்காவில் கிரிப்டோ மோசடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிப்டோ கரன்சி பெயரில் 11 பேர் அடங்கிய மோசடி கும்பல் ஒன்று கிரிப்டோ பிரமிட் மற்றும் போன்சி திட்டத்தை உருவாக்கி அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள சில்லறை முதலீட்டாளர்களிடமிருந்து 300 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 2,500 கோடி) நிதி திரட்டிய மோசடி செய்துள்ளனர்.

அதற்காக அந்நபர்கள் மீது மோசடி மற்றும் தவறான விளம்பரப்படுத்தலில் ஈடுபட்டதாக்க குற்றம் பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளதாக அமெரிக்காவின் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் ஆணையம் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஃபோர்சேஜ் (Forsage) என்ற திட்டத்தின் நான்கு நிறுவனர்களும் அடங்குவர். அவர்கள் கடைசியாக ரஷ்யா, ஜார்ஜியா குடியரசு மற்றும் இந்தோனேசியாவில் வசிப்பதாக அறியப்பட்டதாக SEC வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஆனால் அவர்கள் குறித்து போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
SEC (The Securities and Exchange Commission) இன் புகாரின்படி, இந்த மோசடி கும்பலில் திட்டத்தின் இணையதளம் ஜனவரி 2020 இல் தொடங்கப்பட்டுள்ளது எனவும் மற்றும் மில்லியன் கணக்கான சில்லறை முதலீட்டாளர்கள் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மூலம் பரிவர்த்தனைகளில் நுழைய அனுமதித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரமிட் திட்டமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது, இதில் முதலீட்டாளர்கள் மற்றவர்களை திட்டத்தில் சேர்த்துக் கொண்டு லாபம் ஈட்டியுள்ளனர் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மோசடியானது இவ்வருடத்தின் மிகப்பெரிய கிரிப்டோ மோசடியாகக் கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top