Connect with us

Raj News Tamil

ஓஸ்லோ பிரைட் நிகழ்ச்சி.. கலாச்சாரத்துறை அமைச்சரின் செயல்.. வைரலாக பரவும் பகீர் வீடியோ..

உலகம்

ஓஸ்லோ பிரைட் நிகழ்ச்சி.. கலாச்சாரத்துறை அமைச்சரின் செயல்.. வைரலாக பரவும் பகீர் வீடியோ..

ஐரோப்பியா கண்டத்தில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று நார்வே. இந்த நாட்டில், LGBTQ பிரிவை சேர்ந்த மக்களுக்காக, ஓஸ்லோ பிரைட் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டின், கலாச்சாரம் மற்றும் பாலின சமத்துவத்துறை அமைச்சர் லுப்னா ஜெஃபெரி கலந்துக் கொண்டார்.

அப்போது, LGBTQ பிரிவினருக்கு அந்த அமைச்சர் வழங்கிய ஆதரவை சிறப்பிக்கும் வகையில், Fag Hag என்ற விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விருது வாங்க வந்த அந்த அமைச்சர், தனது மேலாடையை களைந்து, மார்பகத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்த நிலையில், இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்நாட்டை சேர்ந்தவர்கள், பெண் அமைச்சரின் இந்த செயலுக்கு, அவரை பாராட்டி வருகின்றனர்.

More in உலகம்

To Top