சமூக வலைதளம் என்று சொல்வதற்கு பதில் மஞ்சள் வலைதளம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இணையத்தை திறந்தாலே கூல் கேப்டன் தோனியின் முகம் தான். அவருடைய ஸ்டெம்பிங் ஸ்பீடிற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
மிகவும் கடினமான போட்டியில் கூட சிறிதளவு படபடப்பை காட்டிக்கொள்ளமாட்டார். ரொம்ப கூலாகவே டீம்-ஐ வழிநடுத்துவார். வெற்றியோ தோல்வியோ அலட்டிக் கொள்ளவும் மாட்டார். அதனாலேயே அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல முக்கிய தலைவர்கள் கூட அவருடைய லீடெர்ஷிப் ஸ்டைலை பின்பற்றி வருகிறார்கள். உலக தலைவர்கள் முதல் ரசிகர்கள் வரை தல தோனிக்கு 42வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திராவில் தல தோனிக்கு 77 அடியில் கட்அவுட் வைத்து அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்துள்ளனர். இந்த நாள், தங்களுக்கு திருவிழா என்று அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.