சிலிண்டர் விலை ரூ.30.50 குறைவு!

19 கிலோ எடை கொண்ட பொது பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 30 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாத தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை முன்பே எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசு நேரடியாக 100 ரூபாயை குறைத்தது.

இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆன இன்று 19 கிலோ எடை கொண்ட பொது பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையை 30 ரூபாய் 50 காசுகள் எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து உள்ளன.

இதனை அடுத்து 1,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 19 கிலோ எடை கொண்ட பொதுப்பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 30 ரூபாய் குறைந்து 1,930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 818 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News