சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.
இப்படத்தின் ஷீட்டிங் தற்போது திருப்பதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் தொடர்பான தகவல் கசிந்துள்ளது.
அதன்படி, இப்படத்திற்கு தாராவி என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை வைத்து பார்க்கும்போது, மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை மையமாக வைத்து, இந்த திரைப்படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.