Connect with us

Raj News Tamil

ஆண்ட்ராய்டு போன்களில் பரவும் வைரஸ்…இதையெல்லாம் செய்யாதீங்க

இந்தியா

ஆண்ட்ராய்டு போன்களில் பரவும் வைரஸ்…இதையெல்லாம் செய்யாதீங்க

ஆண்ட்ராய்டு போன்களை குறிவைத்து தாக்கும் ‘Daam’என்ற வைரஸ் பரவுவதாக மத்திய அரசு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. இந்த வைரஸ்கள் மொபைல் போன்களில் உள்ள நம்பர்கள், ஹிஸ்டரி மற்றும் கேமராக்கள் ஆகியவற்றை ஹேக் செய்யும் திறன் கொண்டவை என தேசிய சைபர் பாதுகாப்பு முகமை எச்சரிக்கை(CERT) அறிக்கை வெளியிட்டுள்ளது.

நம்பகத்தன்மை இல்லாத தளங்களில் இருந்து டவுன்லோடு செய்யும் அப்ளிகேஷன் மூலமாக இது பரவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய செல்போன் நம்பர்களை பார்த்து கவனமாக இருக்க வேண்டும். மோசடிகாரர்கள் அனைவரும் இது போன்ற போலி நம்பர்களை வைத்துக்கொண்டு வைரஸ்களை பரப்புவதாக சைபர் ஏஜென்சி கூறியுள்ளது.

மேலும் ‘bitly’ and ‘tinyurl’ URL கொண்ட குறுஞ்செய்திகள் செல்போனுக்கு வந்தாலோ செல்போனில் இருந்தாலோ அதை டெலிட் செய்து விடுங்கள். செல்போன்களுக்கு வரும் தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top