Connect with us

Raj News Tamil

“என் நாக்குல முத்தம் கொடு” – சிறுவனிடம் கேட்ட ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா! அதிர்ச்சி வீடியோ!

உலகம்

“என் நாக்குல முத்தம் கொடு” – சிறுவனிடம் கேட்ட ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா! அதிர்ச்சி வீடியோ!

மிகவும் பிரபலமாக உள்ள ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர் தலாய்லாமா. இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்டோர் தொண்டர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், இவரது வீடியோ ஒன்று வெளியாகி, இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வீடியோவில், தலாய்லாமாவின் கால்களில் விழுந்து, சிறுவன் ஒருவன் வணங்குகிறான். அப்போது, அந்த சிறுவனின் உதட்டில், தலாய்லாமா முத்தம் இடுகிறார். மேலும், தனது நாக்கை நீட்டி, அதில் அந்த சிறுவனை முத்தமிடச் சொல்கிறார். ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவின் இந்த செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவ்வாறு பேசியிருப்பதற்கு தலாய்லாமா மன்னிப்பு கோரி உள்ளார்.

இதேபோன்று, கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று தலாய்லாமா நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தனக்கு பின் தலாய்லாமாவாக ஒரு பெண் வந்தால், அவர் மிகவும் அழகானவராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது அந்த சமயத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு தலாய்லாமா மன்னிப்பு கோரியிருந்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top