தமிழ் சினிமாவில் தனக்கென தனிக்கதைக்களத்தை தோ்வு செய்து நடிப்பதுமட்டுமல்லாமல் அதனை மக்கள் விரும்பும் படமாகவும் மாற்றியமைப்பவா் நடிகா் சூா்யா.அப்படி வெற்றிமாறனின் இயக்கத்தில் சூா்யாவின் நடிப்பில் வாடிவாசல் வெளிவரவுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் அமீருடன் நடிக்க சூா்யா ஒத்துக்கொள்ளமாட்டாா் என பேட்டி ஒன்றில் தயாாிப்பாளரான ஞானவேல் ராஜா கூறியிருந்தாா்.
இதற்கு பதிலடி தரும் வகையில் , வெற்றிமாறன் சூா்யாவுடன் வாடிவாசல் படம் குறித்து கலந்துரையாடும் போட்டோ வெளியிட்டு அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கினாா்.மேலும் பருத்திவீரன் சா்ச்சைக்கு முன்பே வாடிவாசலில் அமீா் நடிப்பது சூா்யாவுக்கு தொியுமாம்.சூா்யாவும் இப்படத்தில் நடிக்க ஆா்வமாக உள்ளாராம்.இதனை அறிந்த ரசிகா்கள் பலரும் தங்களின் கேளிக்கையான கருத்துகளை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.