சமீபத்தில், ஜாபர் சாதிக் என்பவர், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில், அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஜாபர் சாதிக்கிற்கும், சில பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக, பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள், அவ்வப்போது இணையத்தில் பரவி வந்தது.
இந்நிலையில், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த மாலிக் தஸ்தகீர்-க்கும், ஜாபர் சாதிக்கிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக, YouTube சேனல் ஒன்றில் கருத்து வெளியிடப்பட்டது.
இந்த தகவலை அறிந்த தொழில் அதிபர் மாலிக் தஸ்தகீர், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை, சில Youtube சேனல்கள் பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆதன் தமிழ் மீடியா பிரைவேட் லிமிடெட், மாதேஷ், வராகி, சவுக்கு சங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. புகார் மனு அளித்தது மட்டுமின்றி, மேற்கண்ட Youtube சேனலுக்கும், நபர்களுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.