ஆதாரில் உள்ள பிறந்த தேதியை அதிகாரபூர்வமாக ஏற்க முடியாது- EPFO!

ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவரின் பிறந்த தேதியை அதிகாரபூா்வமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) தெரிவித்தது.

இதுதொடா்பாக ஜனவரி 16-ஆம் தேதி இபிஎஃப்ஓ வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘பிறந்த தேதி குறித்து அளிக்கப்பட்ட தவறான தகவல்களை சரி செய்வதற்கான ஆவணங்களில் இருந்து ஆதாா் அட்டை நீக்கப்படுகிறது. ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவரின் பிறந்த தேதியை அதிகாரபூா்வமானதாக ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆதாா் எண் என்பது ஒருவரை அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஒருவரின் பிறந்த தேதிக்கான அதிகாரபூா்வ ஆவணமாக அதை ஏற்க வேண்டியதில்லை என கடந்த மாதம் 22-ஆம் தேதி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்திருந்தது. இதை சுட்டிக்காட்டி தற்போது இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது’ என குறிப்பிடப்பட்டது.

RELATED ARTICLES

Recent News