“டீ எதுக்கு சூடா இல்ல” – கேள்வி எழுப்பிய மாமியார்! போட்டுத்தள்ளிய மருமகள்!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியை சேர்ந்தவர் வேலு – பழனியம்மாள் (75) தம்பதி. இவர்கள் இரண்டு பேரும், தனது மகன் சுப்பிரமணி மற்றும் மருமகள் கனகு வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி அன்று, பழனியம்மாள், தனது மருமகளிடம் தேநீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதையடுத்து, மருமகள் போட்டுக் கொடுத்த தேநீரை குடித்த பழனியம்மாள், ஏன் சூடாக இல்லை என்று கூறி, சண்டை போட்டுள்ளார்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த கனகு, அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து, தனது மாமியாரை ஓங்கி அடித்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கனகுவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News