நெல்லை மாவட்டம் கீழகோடன்குளத்தைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மகள் கிறிஸ்டில்லா மேரி (வயது 19). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பிப்ரவரி 1ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. கிறின்டில்லா மேரி எந்த வேலையும் செய்யாமல் செல்போன் பார்த்துக்கொண்டே இருந்துள்ளார்.
இதை பார்த்த இவரது தாயார், ‘உனக்கு திருமணம் நடக்க உள்ளது. அதற்குள் சமையல் வேலைகளை கற்றுக்கொள்’ என அடிக்கடி அவரை கண்டித்துள்ளார். இதனால் வேதனை அடைந்த கிறிஸ்டில்லா மேரி, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூச்சிக்கொல்லி மருத்தை குடித்துள்ளார்.

இதையடுத்து கிறிஸ்டில்லா மேரியை சிகிச்சைக்காக முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிறிஸ்டில்லா மேரி பரிதாமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.