மும்பையில் Street கிரிக்கெட் விளையாடிய டேவிட் வார்னர்!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர். ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துக் கொண்டதன் மூலம், இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்தார்.

குறிப்பாக, விஜயின் வாத்தி கம்மிங், அல்லு அர்ஜூனின் புட்ட பொம்மா ஆகிய பாடல்களுக்கு நடனம் ஆடி, தென்னிந்தியாவில் அதிகப்படியான ரசிகர்களை பெற்றிருந்தார்.

இந்நிலையில், இவர் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியில் கலந்துக் கொள்வதற்கு, மும்பை வந்துள்ளார்.

அப்போது, சிறுவர்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்த அவர், அவர்களுடன் இணைந்து, நடுரோட்டில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள நிலையில், அது வைரலாக பரவி வருகிறது.