Connect with us

Raj News Tamil

கண்கலங்கிய ரோகித்! வைரலாகும் வீடியோ!

தமிழகம்

கண்கலங்கிய ரோகித்! வைரலாகும் வீடியோ!

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின.

முதலில் ஆடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதையடுத்து, இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய வீரர்கள் மகிழ்ச்சியுடன் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர். ஏற்கெனவே பெவிலியன் சென்றிருந்த ரோகித் சர்மா, அங்கிருந்த டிரஸ்ஸிங் ரூம் கேலரியில் உணர்ச்சிவசப்பட்டு அமர்ந்திருந்தார்.

மேலும், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் வந்தபோது ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top