வசூலை வாரிக்குவிக்கும் டிடி ரிட்டர்ன்ஸ்..!

தொடர்தோல்வியால் இனிமேல் ஹீரோவாக நடிக்கமாட்டார் என்று விமர்சனம் எழுந்த நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம், சந்தானத்தின் சினிமா கேரியரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி , கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் முதல் நாளிலேயே ரூ.2 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தலா ரூ.3 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. படம் வெளியாகி, மூன்று நாட்கள் மட்டுமே ஆன நிலையில் இதுவரை 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

கடந்த வாரம் வெளியான படங்களிலேயே டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் தான், நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு நல்ல வசூலையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News