ஐஸ் கிரீமில் இறந்து கிடந்த தவளை..சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு

மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ, தனது மகள்கள் மித்ராஸ்ரீ (வயது 8), ரக்சனாஸ்ரீ (7) மற்றும் உறவினர் மகள் தாரணி (4) ஆகியோருடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

கோவில் அருகே உள்ள ஒரு கடையில் சிறுமிகளுக்கு ஐஸ் க்ரீம் வாங்கி கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட மூன்று குழந்தைகளும் வாந்தி எடுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஜானகிஸ்ரீ குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ் க்ரீமை வாங்கி பார்த்த போது அதில் தவளை ஒன்று இறந்து கிடந்துள்ளது.

இதையடுத்து வாந்தி எடுத்த 3 குழந்தைகளும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜானகிஸ்ரீ திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News