குவைத் மன்னர் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா காலமானதை முன்னிட்டு இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
குவைத் நாட்டின் மன்னராக அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா 3 ஆண்டுகள் ஆட்சி செய்தார். கடந்த மாதம் குவைத் மன்னருக்கு உடல்நலன் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி 86 வயதில் குவைத் மன்னர் காலமானார்.
குவைத் மன்னர் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் குவைத் மன்னர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இந்தியா முழுவதும் ஒருநாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய கொடி பறக்கும் கம்பங்களில் இன்று ஒருநாள் முழுவதும் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.