ஊட்டியில் அதிக அளவு சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி மரணம் அடைந்தது தொடர்பாக சுகாதார ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6-ம் தேதி அதிக எண்ணிக்கையில் சத்து மாத்திரை சாப்பிட்டதாக நான்கு மாணவிகள், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் ஜெய்பா ஃபாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் ஜெய்பா ஃபாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அஜாக்கிரதையாக செயல்பட்ட சுகாதார ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.