சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வசித்து வந்தவர் சதீஷ். இவர், அதே பகுதியை சேர்ந்த சத்யபிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் திடீரென அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், பரங்கிமலை ரயில் நிலையத்தில், தன்னுடன் பேசுமாறு, சத்யபிரியாவுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண் ஒத்துக் கொள்ளாததால், தண்டவாளத்தில் ரயில் வந்தபோது, தள்ளிவிட்டு, கொலை செய்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி அன்று, இந்த சம்பவம் நடந்த நிலையில், சதீஷ் கைது செய்யப்பட்டு, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில், விசாரணை நடந்து வந்தது.
70 சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றவாளி சதீஷ்-க்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.