ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு நேற்று கொலை மிரட்டல் வந்துள்ளது.
முகேஷ் அம்பானிக்கு நேற்று (அக்.27) மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் நீங்கள் 20 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் உங்களைக் கொன்றுவிடுவோம். இந்தியாவில் திறமையான துப்பாக்கிச் சுடுபவர்கள் இருக்கிறார்கள் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்து முகேஷ் அம்பானி தரப்பில் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகார் தொடர்பான விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் ஷதாப் கான் என்பது தெரிய வந்துள்ளது.