Trending
இந்தியாவில் விந்தணுக்கள் எண்ணிக்கை சரிவு..! ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஆண்களின் விந்தணுக்கள் குறைந்துள்ளதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ஹீப்ரூ பல்கலைகழகத்தின் பிரான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் பேராசிரியர் ”ஹகாய் லெவின்” தலைமையில், சுமார் 53 நாடுகளில், 57,700 ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதாக ”ஹீயுமன் ரீபுரொடெக்ஷன்” எனும் மருத்துவ நாளிதழில் வெளியாகியுள்ளது.
தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த 50 ஆண்டுகளில் 50 விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணிகளை ஆராயப்படவில்லை என்றாலும், கருவில் இருக்கும் போதே இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் இடையூறுகள் முக்கிய காரணியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் மனித குலத்திற்கே பேராபத்து ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
