ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம்: கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை!

ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் நகர் பகுதியில் ஆற்றின் கரை ஓரங்களில் வண்டிக்கார தெரு குடியிருப்பு உள்ளனர். இங்கு 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆற்றில் துர்நாற்றம் வீசியதோடு ஆற்றில் மண்டி கிடைக்கும் புதருக்குள் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் சிக்கி கொண்டு இருந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருவாரூர் நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆற்றில் இறங்கி பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என்றும் எந்த பகுதியை சேர்ந்தவர் என்றும் மேலும் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து உள்ளாரா அல்லது தற்கொலை செய்யப்பட்டுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

RELATED ARTICLES

Recent News