வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள வஞ்சியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் 3 ஆம் வெள்ளி முன்னிட்டு நான்காம் ஆண்டாக அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சொர்ண லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு 7,50,000 மதிப்பில் வஞ்சி அம்மனுக்கு சுவர்ணலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இதனை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்