பெரம்பலூர் அருகே மான்வேட்டையாடிய 5 பேர் கைது

பெரம்பலூர் அருகே மான்வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேட்டையாடப்பட்ட 3 மான்கள்,2 உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி, நான்கு சக்கரவாகனத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வெள்ளனூர் அருகே வந்த நான்கு சக்கர வாகனத்தை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த க்ரைம்டீம் போலீசார் நிறுத்தி விசாரித்தனர். வாகனத்தில் வந்தவர்கள் வேட்டைமணி(எ)மணிகண்டன், கோவிந்தன், கார்த்திக், ராமச்சந்திரன், மணி ஆகியோர் என்பதும் திருச்சி மாவட்டம் எதுமலை வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டு திரும்பி வருவது தெரியவந்தது.

வாகனத்தில் வேட்டையாடப்பட்ட மூன்று மான்களும் உரிமம் இல்லாத 2 நாட்டுத்துப்பாக்கி ஆகியவை இருப்பதை கண்ட போலிஸார் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மான்வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கரவாகனத்தையும் வனத்துறையினர் பறிமுதல்செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News