டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஊக்கப்படுத்தும் விதமாக, முதல் வாக்கை செலுத்தும் நபர்களுக்கு, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கிறார்கள்.
இவ்வாறு இருக்க, இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி, எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, 8.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதேபோல், தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில், அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், போட்டியிடாததால், திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 9 மணி நேர நிலவரப்படி, 10.95 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது.