டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த மே மாதம் 10ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. மேலும் ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடைய வேண்டும் என்ற நிபந்தனையை உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் இன்றுடன் முடிவடைந்ததால் அவர் மீண்டும் திகார் சிறையில் சரணடைந்தார்.