தமிழ்நாட்டுக்கு வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். அவருடன் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மானும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இருவரையும் சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநில முதல்-மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில், இன்று தமிழ்நாட்டுக்கு வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.