டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கடந்த 5-ஆம் தேதி அன்று, தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான முடிவுகள், கடந்த 8-ஆம் தேதி அன்று வெளியானது. அதில், 48 தொகுதிகளில், பாஜகவும், 22 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றிப் பெற்றன.
ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதிகளில் கூட வெற்றிப் பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம், 27 வருடங்களுக்கு பிறகு, டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், பதவியேற்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், பிரதமர் முன்னிலையில், ரேகா குப்தா டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதேபோல், புதுடெல்லி தொகுதியில், அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்து, வெற்றிப் பெற்ற பர்வேஷ் வர்மா டெல்லியின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.