Connect with us

Raj News Tamil

பித்தப்பையில் இருந்து 1500 கற்களை நீக்கிய மருத்துவர்கள்.. அதிர வைத்த பெண்..

இந்தியா

பித்தப்பையில் இருந்து 1500 கற்களை நீக்கிய மருத்துவர்கள்.. அதிர வைத்த பெண்..

ஹரியானா மாநிலம் குர்கான பகுதியை சேர்ந்தவர் ரியா ஷர்மா. 32 வயதான இவர், தொடர் வயிற்று உப்புசம் காரணமாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார். மேலும், வலது மேல் வயிற்று பகுதியில், தொடர் வயிற்று வலியையும் சந்தித்துள்ளார்.

முதலில், வாய்வு பிரச்சனை என்று நம்பி, சுய மருத்துவம் செய்துக் கொண்டுள்ளார். ஆனால், பிரச்சனை பெரிதானதால், தனது குடும்ப மருத்துவரை அனுகியுள்ளார். இதையடுத்து, அல்ட்ரா சவுண்ட் முறையின் மூலம், பித்தப்பை முழுக்க கல் இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர், டெல்லியில் உள்ள மருத்துவமனையில், அவருக்கு பித்தப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த சிகிச்சையின்போது, ரியா ஷர்மாவின் பித்தப்பையில், ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கற்கள் இருந்தது தெரியவந்தது. தற்போது, சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், சிறிய கற்களாக இருந்தாலும், அது பித்த நாளங்களில் கலந்துவிடும். இதனால், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும். இதற்கிடையே, பெரிய அளவிலான கற்கள், தீவிர தொற்றுக்கு வழிவகுக்கும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், பித்தப்பை கேன்சராக மாறவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.

இவ்வாறு பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதற்கு, பல்வேறு வாழ்க்கை முறை மாற்றங்கள் தான் காரணமாக உள்ளது.

அதாவது, ஒரு உணவுக்கும், இன்னொரு உணவுக்கும் இடையே அதிக இடைவெளிவிடுவது, நீடித்த விரதங்கள் இருப்பது, பித்தப்பை கற்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்றும் மருத்துவர்கள் கூறினர். குறிப்பாக, பெண்கள் இந்த பிரச்சனையில் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

More in இந்தியா

To Top