கழுத்தில் வெட்டு.. லிவிங் டு கெதர் வாழ்க்கை.. காதலி மரணம்.. காதலன் கைது..

லிவிங் டு கெதரில் வாழ்ந்த நபர், தனது காதலியை குத்தி கொலை செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கணேஷ் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மன்பிரீத் என்பவரும், ரேகா ராணி என்பவரும், லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதில், ரேகா ராணிக்கு 16 வயதில் மகள் ஒருவரும் இருந்துள்ளார். இந்நிலையில், மன்பிரீத்திற்கும், ரேகா ராணிக்கும் இடையே, கடந்த வெள்ளிக்கிழமை அன்று தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த மன்பீரித், தனது காதலியை கத்தியை வைத்து, கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பியோடிய அவர், தலைமறைவாக இருந்து வந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மன்பிரீத்தை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே, அவர் பஞ்சாப்பில் இருப்பதை அறிந்த காவல்துறையினர், நேற்று கைது செய்தனர்.