டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனைக்கு 26 வயது இளைஞரொருவர், தீவிர வயிற்றுவலிக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் வயிற்றை பரிசோதித்து பார்த்த போது அதில் சில்லரை காசுகளும் காந்தங்களும் இருந்துள்ளன. இதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மருத்துவர்கள் இதுபற்றி விசாரிக்கையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், துத்தநாகம் உடலில் சேர்ந்தால் நல்லது என்று நினைத்ததனால் சில்லரை காசுகளையும் காந்தந்தகளையும் முழுங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை செய்த மருத்துவர்கள் வயிற்றிலிருந்து 39 சில்லரை காசுகளையும் 37 காந்தங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை புரிந்துள்ளனர். சிகிச்சைக்குப் பின் அந்த நோயாளி நலமுடன் வீடு திரும்பியதாக மருத்துவர்கள் கூறினர்.