டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை : காங்கிரசுக்கு பின்னடைவு

டெல்லியில் உள்ள 250 வார்டுகளுக்கும் கடந்த 4ம்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 247 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் 250 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆம்ஆத்மி கட்சி 20 வார்டுகளில் முன்னிலையுடன் நகர்ந்தது.

tamil news latest

தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 132 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 101 வார்டுகளில் முன்னிலயில் உள்ளது. காங்கிரஸ் 11 வார்டுகளில் முன்னிலை வகிக்கின்றன.

15 ஆண்டுகளாக பாஜகவின் ஆதிக்கத்தில் உள்ள டெல்லியை ஆம் ஆத்மி கைப்பற்றுகிறது.