அகாசா என்ற விமானம், டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்றுள்ளது. இந்த விமானத்தில், ஒரு குழந்தை, 6 விமான பணியாளர்கள் உட்பட, மொத்தமாக 186 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், விமான வானில் பறந்துக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பு எச்சரிக்கை, விமானியின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால், மும்பையில் தரையிறக்கப்பட வேண்டிய விமானம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில், காலை 10.13 மணிக்கு தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும், வெளியேற்றப்பட்டனர்.
விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து பேசும்போது, “விமானத்தின் கேப்டன் அவசரகால நெறிமுறைகள் அனைத்தையும் பின்பற்றினார்.
மேலும், வெற்றிகரமாக விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். அகாசா ஏர் நிறுவனம், அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறது” என்று கூறினார்.