இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான ‘டிமான்டி காலனி’ நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது.
இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்குமா என்ற கேள்வி திரை உலகில் எழுந்தவண்ணம் இருந்தது. ஆனால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படம் வெளியான நேற்று முதல் நாளில் ரூ.3.36 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் வசூல் அதிகரிக்குமா என்பதை பெருத்திருந்து பார்ப்போம்.