அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் டிமாண்டி காலனி 2.
ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் 3-ஆம் பாகம் தொடர்பான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.
அதாவது, டிமாண்டி காலனி 3-ஆம் பாகத்திற்கான முன் தயாரிப்பு பணிகள், தற்போது துவங்கியுள்ளதாம். மேலும், அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.