டெல்லியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துவரும் நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஜூலை 22 வரை 187 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது டெங்கு பாதிப்பு 243 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.