Connect with us

Raj News Tamil

ஷுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்; மருத்துவமனையில் அனுமதி!

விளையாட்டு

ஷுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்; மருத்துவமனையில் அனுமதி!

இந்தியா கிரிக்கெட் வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியில் இந்தியா அணிக்காக ஷுப்மன் கில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் பங்கேற்றார். ஷுப்மன் கில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகின.

இந்நிலையில் அவருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்பொழுது அவர் நலமுடன் இருப்பதாகவும் ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில், அணியில் இடம்பெறாத ஷுப்மன் கில் ஆப்கானிதானுடனான போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in விளையாட்டு

To Top